இதழ் - 42 இதழ் - ௪௨
நாள் : 12-02-2023 நாள் : ௧௨-0௨-௨௦௨௩எண்
தமிழ் இலக்கணத்தில் எண் ஒருமை, பன்மை என இருவகைப்படும்.
ஒருமை
- ஒன்றைக் குறிப்பது ஒருமை எனப்படும்.
- உயர்திணையில் ஆண்பாலைக் குறிக்கும் சொல்லும், பெண்பாலைக் குறிக்கும் சொல்லும், அஃறிணையில் ஒன்றன் பாலைக் குறிக்கும் சொல்லும் ஒருமைச் சொற்களாகும்.
சான்று
- உயர்திணை ஆண்பால் ஒருமை - தம்பி, கண்ணன்
- உயர்திணை பெண்பால் ஒருமை - தங்கை, கண்ணகி
- அஃறிணை ஒருமை - அது, நாய்
பன்மை
- எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டனவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும்.
- உயர்திணையில் பலரைக் குறிக்கும் சொல்லும், அஃறிணையில் பலவற்றைக் குறிக்கும் சொல்லும் பன்மைச் சொற்களாகும்.
சான்று
- உயர்திணைப் பன்மை - அவர்கள், மக்கள்
- அஃறிணைப் பன்மை - அவை, நாய்கள்
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment