பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 115                                                                                              இதழ் - ௧௧
நாள் : 07- 07 - 2024                                                                          நாள் : 0 - 0 - ௨௦௨௪


உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை எனப்படும்.
சான்று
  • பணப்பை
     இது பணத்தைக் கொண்ட பை என விரிந்து பொருள் தருகிறது. பணம், பை என்னும் இரு சொற்களுக்கு இடையில் 'ஐ' என்னும் வேற்றுமை உருபு 'கொண்ட' என்னும் சொல்லும் (உருபின் பயன்) மறைந்து வந்துள்ளன.

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை 
சான்று
  • தேர்ப்பாகன் - தேரை ஓட்டும் பாகன்  
     இது தேரை ஓட்டும் பாகன் என விரிந்து பொருளை உணர்த்துகிறது. இதில் 'ஐ 'என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் 'ஓட்டும் 'என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
 
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை 
சான்று
    • பொற்சிலை - பொன்னால் ஆகிய சிலை
         இது பொன்னால் ஆகிய சிலை எனவும், இதில் “ஆல்“ என்ற மூன்றாம் வேற்றுமை உருபும் ஆகிய என்னும் சொல்லும்  (உருபின் பயன் ) மறைந்து வந்துள்ளன.

    நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை 
    சான்று
      • மாட்டுக் கொட்டகை - மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை 
      இது மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை எனவும், இதில் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபும் 'கட்டப்பட்ட' என்னும் சொல்லும் மறைந்து வந்துள்ளன.


      திருமதி. தி.செ. மகேஸ்வரி
      தமிழாசிரியர்
      ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
      சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
      கோயம்புத்தூர்-641020

      No comments:

      Post a Comment