இதழ் - 20 இதழ் - ௨௦
பொருள்
நாள் : 11-09-2022 நாள் : ௧௧-௦௯- ௨௦௨௨
'ஆயிரம் காக்கைக்கோர் கல்'
பொருள்
ஆயிரம் காக்கையை ஓட்டுவதற்கு ஒரு சிறு கல்லே போதுமானது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
'ஆயிரம் காக்கைக்கோர் கல்'.
மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
'ஆயிரம் காக்கைக்கோர் கல்'.
ஒரு நாட்டின் மன்னன் தன்மக்களிடம் முழுமையான அன்பைப் பெற்றிருந்தான் எனில் அம்மன்னனை எத்தனை பகைவர்கள் சூழ்ந்தாலும் வெற்றி கொள்ள முடியாது என்பது இப்பழமொழியின் உள்ளார்ந்த பொருளாகும். இதனை, ஒரு மன்னன் தன் மக்களிடம் அன்பு கொண்டவனாகவும் அக்கறை கொண்டவனாகவும் மக்களின் நலனைத் தன்நலனாகக் கொண்டவனாகவும் இருந்தான் எனில், அவனை எத்தகைய துன்பமும் (பகைவர்கள்) அணுகாது என்றும் ஆயிரம் காக்கையை ஓட்டுவதற்கு ஒரு கல் போதுமானது போல அப்பகைவர்களை ஓட்டிவிடலாம் என்பதையே 'ஆயிரம் காக்கைக்கோர் கல்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது. ஆட்சியில் இருப்பவர்க்கு குடிமக்களின் அன்புக்குப் பாத்திரமாவதே சிறந்த வலிமையாகும் என்றும் இப்பழமொழி உணர்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment