இதழ் - 54 இதழ் - ௫௪
நாள் : 07-05-2023 நாள் : 0௭-0௫-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
- உங்களது பணத்தை செக்காகக் கொடுக்கவா?
- உங்களது பணத்தை காசோலையாகக் கொடுக்கவா?
- டைப்பிஸ்ட் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
- தட்டச்சர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
- நல்லவர்கள் துன்பப்படுவது இவ்வுலகில் சகஜமாக உள்ளது.
- நல்லவர்கள் துன்பப்படுவது இவ்வுலகில் வழக்கமாக உள்ளது.
- என் சகி நீ அல்லவா.
- என் தோழி நீ அல்லவா.
- அறம் நிச்சயமாக வெல்லும்.
- அறம் உறுதியாக வெல்லும்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment