பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 138                                                                                     இதழ் - ௧௩௮
நாள் : 15 - 12 - 2024                                                                     நாள் : ௧௫ - ௧௨ - ௨௦௨௪ 



பழமொழி அறிவோம்

பழமொழி – 138

“ உள்ளிருந்து அச்சாணி தாம்கழிக்கு மாறு 

விளக்கம்
ஒருவன் தேரின் உள்ளே இருந்து கொண்டு, தானே அதனுடைய அச்சாணியைக் கழற்றி எறிந்து விடுதல், தேருடன் அவனுக்கு அவனே இழிவைத் தேடிக் கொள்வதாகும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

உண்மை விளக்கம்

சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்
கல்எறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை
இல்இருந்(து) ஆற்ற முனிவித்தல் 'உள்ளிருந்து
அச்சாணி தாம்கழிக்கு மாறு'.

தாம் கூறுகின்ற சொற்களை ஏற்றுக் கொண்டு, தம்மைப் போற்றி நடக்காதவர்களைக், கல்லால் எறிந்தாற் போலக் கடுஞ்சொற்களைப் பேசிப் பகைமையை மேற்கொள்ளும் கீழ் மக்களை, அவர்களுடைய வீட்டிலேயே இருந்து கொண்டு, அவர் செயலுக்காக அவர் மீது இரங்கிப் பேசி, அவருக்குக் கோபம் வருமாறு செய்தல் அறியாமைச் செயலேயாகும் என்பதையே 'உள்ளிருந்து அச்சாணி தாம்கழிக்கு மாறு' என்ற இப்பழமொழி பொருள் உணா்த்துகிறது.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment