பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் : 95                                                                                                இதழ் : 
நாள்   : 18-02-2024                                                                              நாள் :  -0-௨௦௨௪ 


பழமொழி – 93

” பூனைக்கு மணி கட்டுவது யார்? 
 
விளக்கம்
     பூனைக்கு மணி கட்டுவது கடினம் என்றும் அப்பூனைக்கு மணிகட்ட யார் உள்ளனர் என்றும் கேட்பதாக நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

” பூனைக்கு மணி கட்டுவது யார்? 
 
உண்மை விளக்கம்
        நீண்ட நாள்களாக ஒரு நபர் பிற நபர்களுக்குத் துன்பம் (தொந்திரவு) தந்து கொண்டிருக்கிறார். மேலும் அந்த நபர் மிகுந்த கோபம் கொண்டவரும் ஆவார். அந்த நபரின் தவற்றை யாரேனும் ஒருவர் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டும். அத்தகைய கடினமான பணியை யார் செய்வது என்பதைக் கேட்பதாக  பூனைக்கு மணி கட்டுவது யார்“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment