பழமொழி–49
”குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும்“
விளக்கம்
இந்தப் பழமொழியில் குருவைக் குப்பையாகவும், சீடனைக் கோழியாகவும் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
”குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும்“
உண்மை விளக்கம்
இங்கு கோழி குப்பையைக் கிளர தனக்கான உணவைத் தேடி எடுத்து உண்பது போல, மனிதன் தன் அறிவுத்தேடல்களுக்கான சந்தேகங்களைக் குரு ஒருவரை அணுகி அதை நிவர்த்தி செய்து கொள்ளல் வேண்டும் என்பதையே ”குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும்“ என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment