நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். இங்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஏற்ற இடமாக துறைமுகம் அமைந்துள்ளது. கடல் வாணிபத்திற்குச் சாதனமாகிய இடம் துறை அல்லது துறைமுகம் என்று வழங்கப்பெறும்.
தாமிரபருணி ஆற்றின் முகத்தில் வீற்றிருந்த கொற்கைத் துறை நாளடைவில் தூர்ந்து போயிற்று. அந்த நிலையில் கடற்கரையில் அமைந்த காயல் என்ற ஊர் சிறந்த துறைமுகமாயிற்று. பதின்மூன்றாம் நூற்றாண்டு அளவில், காயல் சிறந்ததொகு நகரமாக விளங்கிற்று.
இத்தாலிய அறிஞராகிய மார்க்கோ போலோ என்பவர், தமிழ்நாட்டிற்கு வந்தபோது காயல் துறையின் செழுமையைக் கண்களிப்பக் கண்டார். அத்துறைமுகத்தில் இடையறாது நடந்த ஏற்றுமதியையும் இறக்குமதியையும் அவர் குறித்துள்ளார். மேலும் முத்துக் குளிக்கும் முறையினையும் விரிவாக விளக்கியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த காயல் துறையும் காலகதியில் தூர்ந்து போயிற்று. அவ்வூர் புன்னைக் காயல் என்னும் பேர் கொண்டு, சின்னஞ்சிறிய செம்படவர் ஊராகக் கடற்கரையினின்று மூன்று மைல் உள்ளடங்கி இருக்கின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment