பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 152                                                                                          இதழ் - ௧
நாள் : 06 - 04 - 2025                                                                      நாள் :  -  - ௨௦௨



பழமொழி அறிவோம்

பழமொழி – 150

“ ஊழம்பு வீழா நிலத்து ”

விளக்கம்
 
.அறிவுடையோர், தனக்கு வரக்கூடிய துன்பங்கள் ஊழ்வினையால் நிகழ்வது என்றெண்ணி தளர்ந்து விடாமல் நல்வினைகளைச் செய்வர் என்பது இப்பழமொழியின் பொருளாகும். 


“ ஊழம்பு வீழா நிலத்து ”

உண்மை விளக்கம்

நனியஞ்சத் தக்க அவை வந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வ(து) உணர்வார் - பனியஞ்சி
வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
'ஊழம்பு வீழா நிலத்து'.

அறிவுடைய சான்றோர், நற்செயல்களைச் செய்யும் போது சில துன்பங்கள் வருவது இயற்கை. அத்தகைய துன்பங்கள் ஊழ்வினையால் வந்தது என்பதை அறிந்திருப்பினும் தாம் செய்யும் செயலைக் கைவிட மாட்டார்கள். அதனால் பெரும் துன்பங்கள் வந்தாலும் அத்துன்பத்தைக் கண்டு அஞ்சமாட்டார்கள் என்பதைக் குறிக்கவே 'ஊழம்பு வீழா நிலத்து' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…


முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment