இதழ் - 68 இதழ் - ௬அ
நாள் : 13-08-2023 நாள் : ௧௩-0அ-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிற மொழிச்சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
ஸ்நாக்ஸ் |
சிற்றுணவு |
ஈசன் | இறைவன் |
உபயோகம் | பயன் |
பலே | நன்று |
கஜானா | கருவூலம் |
- அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல.
- அடிக்கடி சிற்றுணவு சாப்பிடுவது நல்லதல்ல.
- ஈசன் அருள் இருந்தால் என்றும் வெற்றியே.
- இறைவன் அருள் இருந்தால் என்றும் வெற்றியே.
- உபயோகமற்ற பொருட்களை வைத்திருக்காதீர்கள்.
- பயனற்ற பொருட்களை வைத்திருக்காதீர்கள்.
- பலே சிறப்பான செயல்.
- நன்று சிறப்பான செயல்.
- அரச கஜானா நிரம்பி உள்ளது.
- அரச கருவூலம் நிரம்பி உள்ளது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment