இதழ் - 187 இதழ் - ௧௮௭
நாள் : 04 - 01 - 2026 நாள் : 0௪ - 0௧ - ௨௦௨௬
இலங்கை என்னும் ஈழ நாட்டிலுள்ள திருக்கோணமலையும் தேவாரப் பாமாலை பெற்றதாகும். தெக்கண கயிலாயம் என்று போற்றப்படும் தென்னாட்டு மலைகளுள் ஒன்று திருக்கோணமலை என்பர். ‘குரை கடல் சூழ்ந்த கோணமாமலை' என்று தேவாரத்தில் புகழப் பெற்ற அம்மலை இன்று திருக்கணாமலை என வழங்கும்.
திருக்கற்குடி
"கற்குடியார் விற்குடியார் கயிலாயத்தார்" என்று தேவாரத்தில் போற்றப்படும் கற்குடி இக்காலத்தில் உய்யக் கொண்டான் திருமலை என வழங்குகின்றது. அம்மலையில் கோயில் கொண்ட இறைவனை 'விழுமியார்’ என்று திருநாவுக்கரசர் போற்றியுள்ளார்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment