பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 188                                                                                          இதழ் - ௧௮௮
நாள் : 11-01-2026                                                                              நாள் : ௧௧-0௧-௨௦௨௬

 


சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


காளத்தி மலை

    தென் கயிலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தி மலை அன்புருவாய கண்ணப்பர் வழிபட்டுப் பேறு பெற்ற அரும் பெரும் தலமாகும்.  "கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடும்" காளத்தி மலையைக் கண் களிப்பக் கண்ட திருஞானசம்பந்தர், அங்குக் கண்ணப்பர் திருவுருவைத் தரிசித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, அவரடியில் விழுந்து போற்றிய பான்மையைத் திருத்தொண்டர் புராணம் எடுத்துரைக்கின்றது.

திருவாட்போக்கி மலை

    திருச்சி நாட்டுக் குழித்தலை வட்டத்தில் உள்ளது வாட்போக்கி மலை. அதனை மாணிக்க மலை என்று சாசனம் கூறுகிறது. இக்காலத்தில் அஃது இரத்தினகிரி என வழங்குகின்றது. இன்னும், அரதனாசலம் சிவாயம், காகம் அணுகா மலை என்னும் பெயர்களும் அதற்குண்டு. அம்மலைக் கோயில் பண்டைத் தமிழ் வேந்தரால் பெரிதும் ஆதரிக்கப்பட்டது என்பது அங்குள்ள கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment