இதழ் - 60 இதழ் - ௬0
நாள் : 18-06-2023 நாள் : ௧௮-0௬-௨௦௨௩ 
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிற மொழிச் சொற்கள் |
தமிழ் சொற்கள் |
ஸ்னாக்ஸ் |
சிற்றுணவு |
கிரைண்டர் |
அரவை இயந்திரம் |
வெரிஃபிகேஷன் |
சரி பார்த்தல் |
லைசென்ஸ் |
உரிமம் |
பைண்டிங் |
கட்டமைப்பு |
- ஸ்னாக்ஸ் அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல.
- சிற்றுணவு அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல.
- கிரைண்டரில் மா அரைப்பது இலகுவாக உள்ளது.
- அரவை இயந்திரத்தில் மா அரைப்பது இலகுவாக உள்ளது.
- எனது சான்றிதழ்களை வெரிபிகேஷனுக்கு அனுப்பியுள்ளேன்.
- எனது சான்றிதழ்களை சரி பார்ப்பதற்காக அனுப்பியுள்ளேன்.
- வாகனம் ஓட்டுவதற்கான லைசென்சைப் புதுப்பிக்க வேண்டும்.
- வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
- எனது ஆய்வேட்டைச் சரியான முறையில் பைண்டிங் செய்ய வேண்டும்.
- எனது ஆய்வேட்டைச் சரியான முறையில் கட்டமைப்புச் செய்ய வேண்டும்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
No comments:
Post a Comment