இதழ் - 148 இதழ் - ௧௪௮
நாள் : 09 - 03 - 2025 நாள் : ௦௯ - ௦௩ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 147
“ இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை ”
விளக்கம்
ஒரு கரையோரம் மேய்ந்து கொண்டிருக்கும் பசு அடுத்த கரையில் பசுமையான புல்லைக்கண்டால் அதை நோக்கிப் போகும் என்பது இப்பழமொழிக்கு விளக்கம் ஆகும்.
“ இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை ”
உண்மை விளக்கம்
ஒரு கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுவிற்கு அக்கரையில் உள்ள புல் பசுமையாகத் தோன்றுகிறதென்று எண்ணி ஆசைகொண்டு ஏமாற்றம் அடைகிறதோ, அதைப் போலவே மனிதர்கள் தம்மிடமுள்ள செல்வங்ளைக் கொண்டு இன்பமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து அடுத்தவர்களின் செல்வத்தைப் கண்டு அவர்களைப் போல் தாமும் ஆகவேண்டும் என்று ஆசை கொள்வது பசுவின் பொய்யான ஆசையைப் போன்று ஏமாற்றத்தையே அளிக்கும் என்பதைக் குறிக்கவே “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment