பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 51                                                                                   இதழ் -
நாள் : 16-04-2023                                                                    நாள் : -0-௨௦௨௩
 
 
     
 
வேற்றுமை உருபுகள்
 
 
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் 

        ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் இல், இன் என்பவைகளாகும். இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகிய நான்கு பொருள்களில் வரும்.
 
சான்று 
  • நீங்கல்           -   மலையின் வீழ் அருவி
  • ஒப்பு             -   காக்கையின் கரிது களம்பழம்
  • எல்லை          -  தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்
  • ஏது (காரணம்)   -   கல்வியில் பெரியவர் கம்பர்
 
 
ஆறாம் வேற்றுமை உருபுகள்

     பெயரின் பொருளைக் கிழமைப் (உரிமை) பொருளாக வேற்றுமைப்படுத்துவது ஆறாம் வேற்றுமை உருபாகும். இவ்வேற்றுமை உரிமைப் பொருளில் வரும். அது, ஆது, அ என்பன ஆறாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவற்றுள் அது, ஆது என்ற இரு உருபுகள் ஒருமைக்கும், அ என்ற உருபு பன்மைக்கும் வரும்.
 
     ஆது என்னும் உருபு இக்காலத்தில் பெரிதும் வருவதில்லை. அ உருபும் வழக்கத்தில் இல்லை.
 
சான்று
  • அது    -   எனது கை, நண்பனது கை    (ஒருமை)
  • ஆது   -    எனாது கை (ஒருமை)
  • அ     -   என கைகள் (பன்மை) இது வழக்கில் இல்லை
 
 
     இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment