பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 81                                                                                                  இதழ் - 
நாள் : 12-11-2023                                                                                    நாள் : --௨௦௨௩

 
மொழி

மொழி
  • மனித சமூகத்தின் தகவல் பறிமாற்றும் கருவியே மொழி. 
  • இம்மொழி மூன்று வகைப்படும். 
  • அவையாவன,
    • தனிமொழி 
    • தொடர்மொழி
    • பொதுமொழி
  • ஒரு மொழி ஒருபொருள னவாம் தொடர்மொழி
  • பலபொரு எனபொது இருமையும் ஏற்பன” ( நன்னூல். நூற்பா. எண்.  260)
தனிமொழி
  • ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனி மொழி எனப்படும். பகாப்பதமாயினும் பகுபதமாயினும்  ஒரு சொல் ஒரு பொருளை மட்டும் குறித்து வருவது தனிமொழி எனப்படும் .
சான்று
  • பகாப்பதம்   -  புலி, கண்,  படி
  • பகுபதம்  -   நடித்தான், ஆடினாள், கண்ணன்

தொடர்மொழி
    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர் மொழி ஆகும். பகாப்பதமாயினும் பகுபதமாயினும் இவ்விருவகை பதங்களும் அல்வழி வேற்றுமைப் பொருளில் இரண்டு முதலாக தொடர்ந்து வந்து இரண்டு முதலிய பல பொருள்களைத் தந்தால் தொடர்மொழி எனப்படும்.
சான்று
  • குடும்ப வாழ்க்கை
  • பொன்னன் வந்தான்
  • படம் பார்த்தான்
  • .
பொதுமொழி
    ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
    ஒரு சொல் பகாப்பதமாகத் தனி மொழியாக நின்று ஒரு பொருளையும், அதே சொல் பகுபதமாகித் தொடர்மொழி நிலையில் பல பொருளையும் கொடுக்குமாயின் பொதுமொழி எனப்படும்.

சான்று
  • தாமரை
    • தாமரை என்னும் பூவைக் குறிக்கும்.
    • தா + மரை பிரிந்து நின்று தாவுகின்ற மான் என பொருள் தரும்.
  •  எட்டு
    • எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்.
    • எள் + து பிரிந்து நின்று எள்ளை உண் என பொருள் தரும்.
  •  பலகை
    • பலகை பகாப்பதமாயின் மரப்பொருளைக் குறித்துத் தனிமொழி ஆகும்.
    • பல + கை எனப் பகுபதமாயின் இரண்டு சொற்கள் தொடர்ந்து நின்று பல கைகள் எனப் பொருள் தருவதால் தொடர்மொழி ஆகும்.
  • இவ்வாறு வைகை, வேங்கை என்னும் ஒரே சொல் தனி மொழி, தொடர் மொழி இரண்டிற்கும் பொதுவாய் நிற்றலால் பொதுமொழி ஆகும்.

    தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment