பக்கங்கள்

தமிழ்சொல் தெளிவோம்

இதழ் - 84                                                                                                இதழ் - 
நாள் : 03-12-2023                                                                                 நாள் : --௨௦௨௩

    
 

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள 

பிறமொழிச் சொற்கள்


தமிழ்ச்சொற்கள்


ஜமக்காளம்
விரிப்பு

மைதானம்
திறந்தவெளித்திடல்

அலங்காரம்
ஒப்பனை

அபிப்பிராயம்
கருத்து


தீபம் 

விளக்கு
 
 
  
  • இந்தப் பச்சை நிற ஜமக்காளம் அழகாக இருக்கிறது.
  • இந்தப் பச்சை நிற விரிப்பு அழகாக இருக்கிறது.

  • விடுமுறை நாட்களில் மைதானம் நிரம்பி வழியும்.
  • விடுமுறை நாட்களில் திறந்த வெளித்திடல் நிரம்பி வழியும்.

  • தற்போது ஆண்களும் அலங்காரத்துக்காக நேரத்தை ஒதுக்குகிறார்கள்.
  • தற்போது ஆண்களும் ஒப்பனைக்காக நேரத்தை ஒதுக்குகிறார்கள்.

  • எனது அபிப்பிராயம் இது.
  • எனது கருத்து இது.

  • கார்த்திகைத் தீபம்  சமயச் சார்பற்ற விழாவாகும்.
  • கார்த்திகை விளக்கீடு  சமயச் சார்பற்ற விழாவாகும்.
 
 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment