இதழ் - 171 இதழ் - ௧௭௧
நாள் : 24 - 08 - 2025 நாள் : ௧௪- ௦௮ - ௨௦௨௫
இஸ்லாமிய தமிழ்ப் புலவரான உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குள வட்டாரத்திலுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார்.
எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். வாலைவாரிதி என்னும் வடநாட்டுப் புலவனை எட்டயபுரம் அரண்மனையில் வாதில் வென்று தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார்.
இவர் சீறாப்புராணம், முதுமொழி மாலை, சீதக்காதி நொண்டி நாடகம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படியே உமறுப் புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார்.
பின்னர் அபும் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீமை நூலின் பல இடங்களில் போற்றுகிறார்.
( வரும் கிழமையும் தமிழ்ப்புலவர் வருவார்... )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment