இதழ் - 4 இதழ் - ௪
நாள் : 22-5-2022 நாள் : உஉ-ரு-௨௦உஉ
அரசு அங்கீகாரத்துடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு ஒப்புதலுடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நான் நாடாளுமன்ற அங்கத்தினராக உள்ளேன்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன்.
சுற்றுலா செல்வதற்கு அனுமதி கிடைத்தது.
சுற்றுலா செல்வதற்கு இசைவு கிடைத்தது.
நாம் அற்பமான செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
நாம் கீழான செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் அநேகம்
கலந்துள்ளன.
நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் பல கலந்துள்ளன.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.
No comments:
Post a Comment