பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 25                                                                                    இதழ் -
நாள் : 16-10-2022                                                                       நாள் : ௧௬ - ௧௦ - ௨௦௨௨
  
 
 
பழமொழி – 25
 
“முருங்கைய வச்சவன் வெறுங்கையோடு போவான்“

     ஒருவன் தன் வீட்டில் முருங்கை மரத்தை நட்டு வைத்தால் இறுதியில் ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடுதான் போவான் என்று நாம் இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்
 
“முருங்கைய வச்சவன் வெறுங்கையோடு போவான்“
 
   ஒருவன் வீட்டில் முருங்கை மரத்தை நட்டு வளர்த்து வந்தால் அம்மரத்திலிருந்து முருங்கைக் காய், முருங்கைக் கீரை, முருங்கைப்பூ என முருங்கையின் அனைத்துப் பகுதிகளும் நமக்குப் பலனைத் தரும்.

 
  இதுமட்டுமின்றி முருங்கை மரத்திலிருந்து பெறும் அனைத்து உணவுப்பொருள்களும் உடலுக்கு நலத்தைத் தரவல்லது. ஆகையால் நாம் தொடர்ந்து அதை உணவாகப் பயன்படுத்தி வந்தால் இறுதிக்காலத்தில் யாருடைய துணையும் இல்லாமல் உடல் நலத்துடன் அதாவது வெறுங்கையோடு (கைத்தடி துணையின்றி) போகலாம் என்பதையே இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment