பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 193                                                                                       இதழ் - ௧
நாள்  :  01 / 03 / 2026                                                                   நாள்   :  0 / 0 / ௨௦௨

 


ஆறும் குளமும் பெயரால் எழுந்த ஊர்கள்

கோட்டாறு

         திருநள்ளாற்றுக்கு அருகே உள்ளது கோட்டாறு. "தேனமரும் மலர்ச் சோலை திருக்கோட்டாறு” என்று திருஞானசம்பந்தர் பாடியிருத்தலால் அவ்வூரின் சிறப்பு இனிது விளங்கும்.


திருவையாறு

    தஞ்சாவூருக்கு வடக்கே ஏழு மைல் அளவில் உள்ள பழம்பதி திருவையாறாகும். பஞ்சநதம் என்னும் வடமொழிப் பெயரும் அதற்குண்டு. தேவாரம் பாடிய மூவரும் திருவையாற்றைப் போற்றியுள்ளார்கள். சஞ்சலம் வந்தடைந்த பொழுது "அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்" திரு ஐயாறு என்றார் திருஞானசம்பந்தர். 

    "செல்வாய செல்வம் தருவாய் நீயே, திருவையாறகலாத செம்பொற் சோதீ" என்று போற்றினார் திருநாவுக்கரசர். "அழகார் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகளோ" என்றழைத்துத் தொழுதார் சுந்தரர். காவிரிக் கோட்டம் என்று விதந்துரைக்கப் பெற்றதனாலும் திருவையாற்றின் பெருமை விளங்குவதாகும்.


 இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment