இதழ் - 77 இதழ் - ௭௭
நாள் : 15-10-2023 நாள் : ௧௫-௧0-௨௦௨௩
தமிழ் சொல் தெளிவோம்
தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள ஹிந்தி மொழிச் சொற்கள் | தமிழ் சொற்கள் |
அச்சா |
நன்று |
ஜிந்தாபாத் | வாழ்க, வெல்க |
ஜெய்ஹிந்த் | இந்தியா வெல்க |
ஜகா | பின்வாங்குதல் |
முண்டாசு | தலைப்பாகை |
- அச்சா அச்சா
- நன்று நன்று
- இந்தியாவுக்கு ஜிந்தாபாத்.
- இந்தியா வாழ்க வெல்க.
- உலக அரங்கில் ஜெய்ஹிந்த் முழக்கம் ஒலிக்கிறது
- உலக அரங்கில் இந்தியா வெல்க முழக்கம் ஒலிக்கிறது.
- ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதில் ஜகா வாங்காதே.
- ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதில் பின்வாங்காதே.
- பாரதியையும் முண்டாசையும் பிரித்துப் பார்க்க முடியாது.
- பாரதியையும் தலைப்பாகையையும் பிரித்துப் பார்க்க முடியாது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment