பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 25                                                                                    இதழ் -
நாள் : 16-10-2022                                                                       நாள் : ௧௬ - ௧௦ - ௨௦௨௨
 
     
 
கன்னடமொழிச் சொற்கள்

    தமிழில்   முப்பத்தெட்டு (38) கன்னடமொழிச் சொற்கள் கலந்து இருப்பதாகத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. தமிழில் கலந்துள்ள கன்னடமொழிச் சொற்கள் எவையெவை என்பதை இக்கிழமை பார்க்கலாம்.
 

1. என் கழுத்தில் அணிந்துள்ள அட்டிகையைப் பாருங்கள்.

  என் கழுத்தில் அணிந்துள்ள கற்கள் பதித்த கழுத்தணியைப் பாருங்கள்.

2. அழகான இந்தத் தங்கநகைப் பட்டறையில் உருவானது.

  அழகான இந்தத் தங்கநகைத் தொழிற்கூடத்தில் உருவானது.

3. எகத்தாளமாகச் சிரிக்காதே

  இகழ்ச்சியாகச் சிரிக்காதே.

4. தண்டல் பணத்தைக் கட்ட மறக்காதீர்கள்.

  தீர்வைப் பணத்தைக் கட்ட மறக்காதீர்கள்.

5. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்கப் பழக வேண்டும்.

  வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளப் பழகவேண்டும்.

 

 அட்டிகை - கற்கள் பதித்த கழுத்தணி               பட்டறை - தொழிற்கூடம்
 
 
 
 ( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
 

 
 
 
 

No comments:

Post a Comment