இதழ் - 205 இதழ் - ௨0௫
நாள் : 01 / 11 / 2026 நாள் : 0௧ / ௧௧ / ௨௦௨௬
பழமொழி அறிவோம்
பழமொழி – 204
' கடம்பெற்றான் பெற்றான் குடம் '
விளக்கம்
ஒருவர் கடன் வாங்கினால் அதை மீண்டும் திருப்பித் தருவதற்கு மனம் வருவது கடினம். அதனால், பொருளைப் பேணுபவன் தீயோருக்குக் கடன் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
கைவிட்ட ஒண்பொருள் கைவரவு இல்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்!
'கடம்பெற்றான் பெற்றான் குடம்'.
தம் கையை விட்டுக் கடந்து போன ஒரு பொருளானது மீண்டும் தம் கைக்கு வந்து சேர்வது கடினம். இதைப் பொருளின் இயல்பை உண்மையாகவே உணர்ந்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும்.
பொருளைப் (கடன்) பெற்றவர்கள் உண்மையற்றவர்களாக இருப்பின் கடன் கொடுத்தவன் பெறுவது என்பது பாம்பு உள்ள குடத்தில் தானே கையை விட்டுக் கொள்வது போலாகும் என்பதைக் குறிக்கவே 'கடம்பெற்றான் பெற்றான் குடம்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment