பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 180                                                                                இதழ் - ௧
நாள் : 26 - 10 - 2025                                                              நாள் :   - ௨௦௨



இலக்கணம் கற்போம்
 

உரிப்பொருள்

    முப்பொருள் வகைப்பாட்டில் மூன்றாவதாக அமைவது உரிப்பொருள் ஆகும். ஐவகைப்பட்ட திணைகளுக்கும் உரிய ஒழுக்கங்களை உரிப்பொருள் என்று பெயரிட்டு வழங்குவர். அந்த ஒழுக்கங்கள் ஐந்திணை பற்றிய செய்யுட்களுக்கு உரிய பாடுபொருள் என்பதனாலும் உரிப்பொருள் எனப்பட்டது. 

     அவ்வத்திணைகளுக்கு உரிமை உடைய ஒழுக்கங்கள் என்று விளக்கம் தருவதும் பொருத்தம் உடையதே! (உரி = உரியது, உரிமை உடையது)

ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் ‘ஒழுக்கம்’ உரிப்பொருள் எனப்படும்.



இலக்கணம் தொடரும் . . . 


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020 

No comments:

Post a Comment