இதழ் - 39 இதழ் - ௩௯
நாள் : 22-01-2023 நாள் : ௨௨-0௧-௨௦௨௩
நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடமாகும். இங்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஏற்ற இடமாக துறைமுகம் அமைந்துள்ளது. கடல் வாணிபத்திற்குச் சாதனமாகிய இடம் துறை அல்லது துறைமுகம் என்று வழங்கப்பெறும்.
இக்காலத்தில் பொதுவாக அதனைத் துறைமுகம் என்றே அழைக்கிறோம். பண்டைத் துறைமுகங்கள் பெரும்பாலும் ஆற்று முகங்களில் அமைந்திருந்தன. குமரியாறு கடலொடு கலந்த இடத்தில் குமரித்துறை இருந்ததாக இலக்கியம் கூறுகின்றது. அத்துறையில் விளைந்த முத்துச்சலாபத்தின் செம்மையைக் குமரகுருபர அடிகள் பாராட்டுகின்றார். குமரித்துறை கடலாற் கொள்ளப்பட்டு அழிந்தது.
இரண்டாமயிரம் ஆண்டுகட்கு முன்பு கொற்கைத் துறை தென்னாட்டுப் பெருந்துறையாக இருந்தது. அத்துறையில் விளைந்த முத்து, கடல் கடந்து, பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுப் பெருமதிப்புப் பெற்றது. கொற்கைத்துறை செல்வச் செழுந்துறையாய் இலங்கிய தன்மையால் பாண்டிய மன்னன் கொற்கைத் துறைவன் என்றும், கொற்கைக் கோமான் என்றும் குறிக்கப்பட்டான்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment