பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 183                                                                        இதழ் - ௧
நாள் :  29 - 11 - 2025                                                      நாள் :    - ௨௦௨

 


சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


மலையும் குன்றும் அத்தி

தொண்டை நாட்டு வெண்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்த அத்தி என்னும் தலம், பழம் பெருமை வாய்ந்தது என்பது சாசனத்தால் விளங்கும். அங்கு அமைந்த பழைய ஆலயம் அகத்தீச்சுரம் ஆகும். பண்டையத் தமிழரசர் பலர் அதனை ஆதரித்துள்ளனர். இராஜராஜ சோழன் காலத்தில் கேரளாந்தக நல்லூர் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது. கேரளாந்தகன் என்பது அம் மன்னனுக்குரிய விருதுப் பெயராகும். எனவே, இவ்வூர் அவன் ஆதரவு பெற்ற பதிகளுள் ஒன்று என்பது வெளிப்படுகிறது.

அப்பெயர் அதன் மறு பெயராய் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிய தன்மை சாசனங்களால் விளங்கும். பின்பு விஜயநகரப் பெருவேந்தனாகிய கிருஷ்ணதேவராயன் காலத்தில் கிருஷ்ணராயபுரம் என்னும் பெயர் அத்திக்கு அமைந்தது. இங்ஙனம் பலபடியாகப் பெருமன்னர் ஆதரவுக்குரியதாக விளங்கிய அத்தியே திருஞானசம்பந்தர் குறித்த ஊராக இருப்பதை அறியமுடிகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment