இதழ் - 156 இதழ் - ௧௫௬
நாள் : 04 - 05 - 2025 நாள் : ௦௪ - ௦௫ - ௨௦௨௫
ஒரு செய்யுளில் அமைந்துள்ள சொற்களை ஓர் அடிக்குள்ளே மொழிமாற்றிப் பொருள் கொள்வது ’மொழிமாற்றுப் பொருள்கோள்’ ஆகும்.
சான்று
“சுரையாழ அம்மி மிதப்ப – வரையனைய
யானைக்கு நீந்து முயற்சி நிலையென்ப
கானக நாடன் சுனை ”
கானக நாடன் சுனையில் சுரை ஆழும், அம்மி மிதக்கும், யானை நீந்தும், முயல் நிலையாக நிற்கும் எனச் சொற்கள் நகைப்பிற்கு இடமான பொருளைத் தருகின்றன. எனவே செய்யுளில் உள்ள சொற்களை
“ சுரை மிதப்ப அம்மி அழ
யானைக்கு நிலை முயற்சி நீத்து “
என ஓரடிக்குள் இடம் மாற்றி வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்யுளில் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ற வகையில் ஓரடிக்குள் மாற்றிப் பொருள் கொள்ளும் முறைக்கு ‘மொழிமாற்றுப் பொருள்கோள்’ என்று பெயராகும்.
”ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை
மாற்றியோர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே “
- நன்னூல் 413
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment