இதழ் - 48 இதழ் - ௪௮
நாள் : 26-03-2023 நாள் : ௨௬-0௩-௨௦௨௩வேற்றுமை உருபின் வகைகள்
முதல் வேற்றுமை (அல்லது) எழுவாய் வேற்றுமை
வாக்கியத்தில் பெயர்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் இருப்பதை எழுவாய் என்கிறோம். வேற்றுமை உருபுகள் சேராமல் இவ்வாறு எழுவாய் அமையும் பெயர்ச்சொல் முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை எனப்படும்.
சான்று
- பாரி கொடுத்தான் - வினைப்பயனிலை
- அவன் பாரி - பெயர்ப்பயனிலை
- அவன் யார்? - வினாப்பயனிலை
இரண்டாம் வேற்றுமை அல்லது செயப்படு பொருள் வேற்றுமை
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை செயப்படு பொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இதனை செயப்படு பொருள் வேற்றுமை எனவும் வழங்குவர்.
இதன் உருபு ஐ ஆகும். இரண்டாம் வேற்றுமை உருபு ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகைப் பொருள்களில் வரும்.
சான்று
- வளவன் பானை வனைந்தான் - ஆக்கல்
- வளவன் மரத்தை வெட்டினான் - அழித்தல்
- வளவன் சென்னையை அடைந்தான் - அடைதல்
- வளவன் இல்லறத்தைத் துறந்தான் - நீத்தல்
- வளவன் காளையைப் போன்றவன் - ஒத்தல்
- வளவன்செல்வத்தைஉடையவன் - உடைமை
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும்”
- நன்னூல். நூற்பா. எண். 296
இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment