இதழ் - 96 இதழ் - ௯௬
நாள் : 25-02-2024 நாள் : ௨௫-0௨-௨௦௨௪
பண்புப்பெயர்ப் புணர்ச்சி விதிகள்
மையீற்றுப் பண்புப்பெயர்ப் புணர்ச்சி
முதல் விதி
- மையீற்றுப் பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் உள்ள முதல் விதியைக் காண்போம்.
ஈறு போதல்
- ஈறு போதல் என்னும் விதியாவது, நிலை மொழியின் இறுதி எழுத்து நீங்கிப் புணர்வது. நிலைமொழியின் இறுதியில் உள்ள ‘மை’ என்னும் உயிர்மெய் எழுத்துக் கெட்டுப் புணரும்.
சான்று
- பெருவழி = பெருமை + வழி (ஈறுபோதல் விதிப்படி ‘மை’ கெடுதல்)
- செம்மொழி = செம்மை + மொழி (ஈறுபோதல் விதிப்படி ‘மை’ கெடுதல்)
ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய் திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே
- நன்னூல் நூற்பா எண். 136
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment