இதழ் - 82 இதழ் - ௮௨
நாள் : 19-11-2023 நாள் : ௧௯-௧௧-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள பாலி மொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
அமுல் | நடைமுறை |
அனாமத் | கேட்பாரற்ற |
அத்து | வரம்பு |
வேதம் | மறை |
கஜு | முந்திரி |
- அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது.
- அரசாங்கம் பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
- அனாமத பொருட்களா இவை?
- கேட்பாரற்ற பொருட்களா இவை?
- அத்துமீறி நடக்காதே.
- வரம்பு மீறி நடக்காதே.
- தமிழ் வேதம் திருக்குறளே.
- தமிழ் மறை திருக்குறளே.
- கஜு சாப்பிட்டு உள்ளீர்களா?
- முந்திரி சாப்பிட்டு உள்ளீர்களா?
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment