பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 13                                          இதழ் - ௧௩

நாள் : 24-07-2022                                  நாள் : ௨௪-௦௭ - ௨௦௨௨
 
  
 
 
பழமொழி – 13

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

     இப்பழமொழியில் மாட்டிற்கும் சூட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனிதர்களை மறைமுகமாகக் கண்டிக்கும் (உள்ளொன்று வைத்து புறம்பேசும் நிலை) நோக்கத்துடன் இப்பழமொழியை நாம் பயன்படுத்துகிறோம்.

உண்மை விளக்கம்


நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு

என்பதே பழமொழி ஆகும். சந்தையில் மாடு வாங்கச் செல்வோர் மாட்டின் தரத்தை அறிய மண்ணில் அந்த மாடு பதிக்கக்கூடியக் கால் சுவட்டின் அழுத்தத்தை (கால் தடம்) வைத்தக் கணக்கிடுவர். இதனையே நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு என்ற பழமொழி பொருள் உணர்த்துகிறது. மேலும், நல்ல மனிதர்களை அறிய வேண்டுமானால் அவனது செயல்களை வைத்தே அறியமுடியும் என்பது இப்பழமொழியின் உள்ளார்ந்த உண்மை விளக்கமாகும்.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...

 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment