பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 199                                                                              இதழ் - ௧
நாள்  :  03 / 05 / 2026                                                        நாள்   :  0 / 0 / ௨௦௨

 


இலக்கணம் கற்போம்
 
பாடாண்படலம்

38. புலவராற்றுப்படை
அருள் பெற்ற புலவன் அது பெறாத மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்துவது.

39. புகழ்ந்தனர் பரவல்
நினைத்ததைப் பெறுவதற்காக இறைவனைப் போற்றி வணங்குவது.

40. பழிச்சினர் பணிதல்
உலக இன்பத்தை நுகர்தல் பொருட்டு இறைவனை வணங்குதல்.

41. கைக்களை
ஒரு பெண் தலைவனுடைய மாலையினைப் பெற விரும்புவது.

42. பெருந்திணை
தன்னை விரும்பாத தலைவனை ஒருத்தி தழுவ விரும்புவது.

43. புலவி பொருளாகத் தோன்றிய பாடாண்பாட்டு
தலைவனின் மார்பினை இனித் தழுவமாட்டேன் என ஊடலுற்றப் பெண் கூறுவது.

44. கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயந்த பக்கம்
தெய்வப் பெண்கள் தன் இனத்தைச் சார்ந்த ஆண் தெய்வங்களை விரும்பியது.

45. கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
மானிடப் பெண்கள் கடவுளை விரும்புவது.

46. குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி
சிறுவனை மங்கைப் பருவ பெண்ணொருத்தி விரும்புவது.

47. ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி
காதல் நிகழ்வுகள் வெளிப்படத் தோன்றும் ஊரைச் சிறப்பித்துக் கூறுவது. 


இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment