இதழ் - 61 இதழ் - ௬௧
நாள் : 25-06-2023 நாள் : ௨௫-0௬-௨௦௨௩ 
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிற மொழிச் சொற்கள் |
தமிழ் சொற்கள் |
அநாச்சாரம் |
ஒழுக்கக்கேடு |
அனுஷ்டி |
கைக்கொள் |
அக்கடா |
வாளா |
இராகம் |
பண் |
உபதேசம் |
ஓதுகை |
- மாணவர்கள் அநாச்சாரமாக நடந்து கொள்ளக் கூடாது.
- மாணவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளக் கூடாது.
- மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை அனுஷ்டிக்க வேண்டும்.
- மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும்.
- அக்கடா என்று இருக்கத் தோன்றுகிறது.
- வாளா இருக்கத் தோன்றுகிறது.
- சம்பந்தர் இராகத்தோடு பாடல்களைப் பாடியவர்.
- சம்பந்தர் பண்ணோடு பாடல்களைப் பாடியவர்.
- உபதேசம் செய்வது எல்லோராலும் முடியாது.
- ஓதுகை செய்வது எல்லோராலும் முடியாது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
No comments:
Post a Comment