இதழ் - 118 இதழ் - ௧௧௮
நாள் : 27- 07 - 2024 நாள் : ௨௭ - 0௭ - ௨௦௨௪
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.
சான்று
சான்று
இவ்வாறு சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.
- பனைமரம்
- இத்தொடர் பனை ஆகிய மரம் என விரியும். மரம் என்பது பொதுப்பெயர், பனை என்பது மரங்கள் ஒன்றனைக் குறிக்கும் சிறப்புப்பெயர்.
- சாரைப்பாம்பு
- இத்தொடர் சாரை ஆகிய பாம்பு என விரியும். பாம்பு என்பது பொதுப்பெயர் சாரை என்பது சிறப்புப் பெயர்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment