பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 66                                                                                            இதழ் -
நாள் : 30-07-2023                                                                             நாள் : 0-0-௨௦௨௩
 
      
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
  


தமிழில் வழங்கப்படும் 

பிற மொழிச்சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

 
உக்கிரம்

வெப்பம், கொடுமை, சினம்

கர்ப்பவதி

சூலி

சிலாகித்தல்

புகழ்தல்

மாமிசம்

இறைச்சி, ஊன்

மிருதங்கம்

மத்தளம்
 
 
  • வெயில் உக்கிரமாக இருக்கிறது.
  • வெயில் வெப்பம் அதிகமாக இருக்கிறது.

  • கர்ப்பவதியான பெண்ணை மிகக் கவனத்துடன் கவனிக்க வேண்டும்.
  • சூலியான பெண்ணை மிகக் கவனத்துடன் கவனிக்க வேண்டும்.

  • பேச்சாளர் திருஞானசம்பந்தரை சிலாகித்துப் பேசினார்.
  • பேச்சாளர் திருஞானசம்பந்தரை புகழ்ந்து பேசினார்.

  • சமணர்கள் மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்கள்.
  • சமணர்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்கள்.

  • இசைக்கருவிகளில் தோல் கருவி மிருதங்கமாகும்.
  • இசைக்கருவிகளில் தோல் கருவி மத்தளமாகும்.

 
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை

No comments:

Post a Comment