இதழ் - 102 இதழ் - ௧0௨
நாள் : 07-04-2024 நாள் : ௩௭-0௪-௨௦௨௪
- முன்னின்ற மெய்திரிதல் என்னும் விதியாவது, மெய் எழுத்து மற்றொரு மெய் ஆகத் திரிதல்.
சான்று
சேதாம்பல்
- சேதாம்பல் = செம்மை + ஆம்பல் (ஈறு போதல் விதிப்படி ‘மை’ நீங்கல்)
- செம் + ஆம்பல் = (ஆதிநீடல் விதிப்படி செ – சே ஆயிற்று)
- சேம் + ஆம்பல் = (முன்னின்ற மெய் திரிதல் விதிப்படி (ம் - த் ஆனது)
- சேத் +ஆம்பல் = (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே (த் +ஆ)
- சேதாம்பல்
இதில்,
'ஈறு போதல் 'விதிப்படி, மை கெட்டு, 'ஆதி நீடல்' விதிப்படி சேம் + ஆம்பல் ஆயிற்று, பின் 'முன்னின்ற மெய் திரிதல்' என்னும் விதிப்படி மகர மெய் தகர மெய்யாகத் திரிந்து சேத் + ஆம்பல் என்றாகி, 'உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி சேதாம்பல் என்றாயிற்று.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment