இதழ் - 204 இதழ் - உ௰௪
நாள் : 25 / 10 / 2026 நாள் : ௨௫ / ௰ / ௨௰உ௬
பழமொழி அறிவோம்
பழமொழி – 204
' ஐயா கதிர் போல, அம்மா குதிர் போல '
விளக்கம்
ஒரு வீட்டின் தலைவர் கதிர் போல் ஆரோக்கியமாகவும் தலைவி குதிர் போல வயோதிகத்துடனும் இருப்பதாக நாம் இந்தப் பழமொழிக்கு பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
குடும்பத் தலைவரானவர் முற்காலங்களில் வயல் நிலங்களில் விதை விதைத்து சாகுபடி செய்யும் பணியாட்களை மேற்பார்வை செய்வதால் அவர் உடல் கதிர் போல நிமிர்ந்துள்ளதாகவும் குடும்பத்தலைவியானவர் எவ்விதப் பணியும் செய்யாமல் வீட்டில் இருப்பதால் குதிர் போல பருத்து இருப்பதைக் குறிப்பால் உணர்த்த “ஐயா கதிர் போல, அம்மா குதிர் போல” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment