பக்கங்கள்

பழமொழி அறிவோம்

 
இதழ் - 26                                                                                    இதழ் -
நாள் : 23-10-2022                                                                      நாள் : --௨௦௨௨

 
 
பழமொழி – 26 
 
” அறிமடமும் சான்றோர்க்(கு) அணி ”

        சான்றோர்கள், ஒன்றைக் கொடுப்பதற்கு ஏற்ற பொருள் இல்லை என்பதை அறிந்தும் அதைத்தெரியாதவர்கள் போல் அப்பொருளை வழங்குவர். அத்தகைய செயல் சான்றோரின் உயர்ந்த, அழகுநிறைந்த மனநிலையை வெளிப்படுத்துகிறது என்பது இப்பழமொழியின் பொருளாகும். (அணி – அழகு)
 
     முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
     தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும் - சொல்லின்
     நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
     'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.


       பாரி முல்லைக் கொடிக்குத் தேரினையும், பேகன் மயிலுக்குப் போர்வையும் கொடுத்ததை இலக்கியங்களின் வழி அறிகிறோம். இத்தகைய சான்றோர்கள், ஒன்றைக் கொடுப்பதற்கு ஏற்ற பொருள் இல்லை என்பதை அறிந்தும் அதைத் தெரியாதவர்கள் போல் அப்பொருளை வழங்குவர். அத்தகைய செயல் சான்றோரின் உயர்ந்த அழகுநிறைந்த மனநிலையை வெளிப்படுத்துகிறது.
 
     இதனையே ”அறிமடமும் சான்றோர்க்கு அணி” என்ற இப்பழமொழியில் அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பைத் தருவதாகும் என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
 
     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 





No comments:

Post a Comment