பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 114                                                                                   இதழ் - ௧௧
நாள் : 30 - 06 - 2024                                                              நாள் : 0 - 0௬ - ௨௦௨௪


பழமொழி – 114

உமிக்குற்று கைவருந்து மாறு "

விளக்கம்

     பயனற்ற உமியை (நெல்லின் தோல்) உரலில் இட்டு குத்திக் கொண்டு இருப்பதால் குற்றுகின்ற கை நோகுமே தவிர அதனால் பயன் ஒன்றும் இல்லை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

உண்மை விளக்கம்

       தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க்(கு) உற்ற(து)
       எமக்குற்ற தென்றுணரா விட்டாக்கால் என்னாம்
       இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட!
       உமிக்குற்று கைவருந்து மாறு'.

     சுற்றத்தார் ஒருவருக்குத் துன்பம் வரும் வேளையில் உதவாத ஒருவன் பயனற்றவன் ஆவான். அவன் நம்மோடு நட்புடன் பழகினாலும் அது பயனற்றதே ஆகும். அத்தகைய ஒருவனின் நட்பு, நெல்லின் உமியை வெறுமனே உரலில் இட்டுக் குற்றிக்கொண்டிருபதற்குச் சமமாகும் என்பதை விளக்கவே 'உமிக்குற்று கைவருந்து மாறு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment