இதழ் - 50 இதழ் - ௫0
நாள் : 09-04-2023 நாள் : 0௯-0௪-௨௦௨௩
நாள் : 09-04-2023 நாள் : 0௯-0௪-௨௦௨௩
”இடையன் எறிந்த மரம்“
விளக்கம்
இடையன் ( ஆடு மேய்ப்பவர் ) கொஞ்சம் கொஞ்சமாகக் கிளையை ஒடித்தே ஒரு மரத்தை அழித்து விடுவான். அது போலவே, இல்லாததைத் தருவதாக வாக்களிப்பவனின் புகழும், கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து அழிந்து போகும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்று
அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
'இடையன் எறிந்த மரம்'.
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்று
அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
'இடையன் எறிந்த மரம்'.
”இடையன் எறிந்த மரம்“
உண்மை விளக்கம்
தகுதியில்லாத ஒருவனிடம் நெருங்கிப் பழகியவர்கள் ஏதேனும் கேட்டால், அந்நபர் தன்னிடத்தில் இல்லாத பொருளாயினும் தீர்க்கமாய்த் தருவதாய் உறுதியளிப்பர். ஆனால் அவர்கள் வீண் உறுதிமொழியையே கொடுத்து தங்களின் புகழைத் தாங்களே அழித்துக் கொள்வர்.
இத்தகைய செயல் இடையனால் வெட்டப்பட்ட மரம் எவ்வாறு பயனற்று அழியுமோ அதைப்போன்றது என்பதையே 'இடையன் எறிந்த மரம்' என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment