பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 84                                                                                                இதழ் - 
நாள் : 03-12-2023                                                                                 நாள் : --௨௦௨௩



 
மழவர்
 
     மழவர் என்னும் சமூகத்தார் தமிழகத்தில் வாழ்ந்த மற்றொரு பழைய குலத்தார் ஆவர். அன்னார் சிறந்த படை வீரர்காளகத் திகழ்ந்துள்ளனர். முடியுடைய மூவேந்தர்களும் அவர்களின் படையுதவியை நாடியுள்ளனர். அக்குலத்தார்க்கும், தமிழ் அரச குலத்தார்க்கும், உறவு முறையும் இருந்ததாகத் தெரிகின்றது. 

    தஞ்சை நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று அக்குலத்தார் பெயரைத் தாங்கி நிற்கின்றது.

     " மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே 
       மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே "
என்று தேவாரத்திற் பாடப்பெற்ற மழபாடி என்னும் ஊர் மழவரால் உண்டாக்கப்பட்டதாகும். 

     மழவர் பாடி என்பது தற்காலத்தில் மழபாடியாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருமழபாடி, மழவராயநல்லூர், மழவன், சேரம்பாடி, திருமல்வாடி, மழவராயனூர், மழவராயன்பட்டி, மழவூர், மழவராயனேந்தல், மளவராயநத்தம் முதலிய ஊர்கள் பல்வேறு மாவட்டங்களில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment