பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 93                                                                                                       இதழ் - 
நாள் : 04-02-2024                                                                                      நாள் : 0-0-௨௦௨


 
குறுக்கையர் 
 
    வேளாளர் குலத்தைச் சேர்ந்த பழங்குடிகளுள் ஒன்று குறுக்கையர் சமூகமாகும். திருநாவுக்கரசர் அக்குடியைச் சேர்ந்தவர் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்குடியினர் பெயரால் அமைந்த ஊர்கள் சோழநாட்டில் பலவாகும். அவற்றுள் மாயவரம் வட்டத்தில் அமைந்த குறுக்கை, பாடல் பெற்றுள்ளதாகும். 

அங்குள்ள வீரட்டானத்து இறைவனை,

        சாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த 
        கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே

என்று போற்றினார் திருநாவுக்கரசர். இன்னும் சில குறுக்கைகள் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளன. திருப்பிடவூர் நாட்டுக் குறுக்கை இப்பொழுது நாட்டுக் குறுக்கையென்னும் பெயரோடு திருச்சி நாட்டு லால்குடி வட்டத்திலுள்ளது. திருநறையூர் நாட்டுக் குறுக்கை என்று சாசனத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது கொறுக்கை என்னும் பெயர் கொண்டு இன்று கும்பகோணம் வட்டத்தில் காணப்படுகின்றது. இவ்வாறு குறுக்கையர் வாழ்ந்த பகுதி குறுக்கை என்ற ஊர்ப்பெயரில் வழங்கி வந்துள்ளமை அறியமுடிகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment