இதழ் - 164 இதழ் - ௧௬௪
நாள் : 06 - 07 - 2025 நாள் : ௦௬ - ௦௭ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
புலவரும் ஊர்ப்பெயரும்
மோசியார்
மோசி என்னும் சொல்லாலும், அதோடு தொடர்ந்த பெயராலும் குறிக்கப்படும் புலவர்கள் பழந்தொகை நூல்களில் சிலர் உண்டு. புறநானூற்றில் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் பன்னிரு பாட்டால் புகழ்ந்து பாடியவர் முட மோசியார் ஆவர். இவரை மோசி என்றும் அக்காலத்து அறிஞர் அழைத்ததாகத் தெரிகின்றது. இன்னும் மோசி கீரனார் இயற்றிய பாடல்கள் அகப்பாட்டிலும், புறப்பாட்டிலும் காணப்படும்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரமானின் முரசு கட்டிலில் அறியாது படுத்துறங்கி, அவனால் கவரி வீசப்பெற்ற புலவர் இவரே. இன்னும் மோசி கொற்றனார், மோசி சாத்தனார், மோசி கண்ணத்தனார் என்னும் புலவர்களும் முற்காலத்தில் இருந்தனர். அன்னார் பெயர்களில் அமைந்த மோசி என்னும் சொல் மோசுகுடி என்ற ஊர்ப் பெயரில் விளங்குகின்றது. இப்பெயர் பெற்ற ஊர் இராமநாதபுரத்துச் சிவகங்கை வட்டத்தில் உள்ளது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment