பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 155                                                                                இதழ் - 
நாள் : 27 - 04 - 2025                                                            நாள் :   - ௨௦௨
 
 


சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


திருவாதவூரர் - திருநாவுக்கரசர்


     தமிழ் நாட்டில் ஆன்றோர் பிறந்த ஊர்கள் சிறந்த தலங்களாக மதிக்கப் பெற்றன. பாடல் பெற்ற தலங்களைப் போலவே அவ்வூர்ப் பெயர்களில் திரு என்னும் அடை விளங்கக் காணலாம். சைவர்கள் தலைக்கொண்டு போற்றும் பெருமை சான்றது திருவாசகம். அதனை அருளிச் செய்தவர் மாணிக்கவாசகர். மணி மொழிகளால் அமைந்த திருவாசகத்தைப் பாடிய பின்னரே மாணிக்கவாசகர் என்னும் பெயர் அமைவதாயிற்று. அதற்கு முன் திருவாதவூர் என்றே அவர் குறிக்கப் பெற்றார். அவர் பிறந்தமையால் பாண்டி நாட்டிலுள்ள வாதவூர், திருவாதவூர் ஆயிற்று. அவ்வாறே திருநாவுக்கரசர் பிறந்தமையால் பெருமையுற்ற ஊர் ஆமூர் ஆகும். "தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர்" என்று திருத்தொண்டர் புராணத்தில் சிறப்பிக்கப்பட்ட ஊர் இப்பொழுது தென் ஆர்க்காட்டுக் கூடலூர் வட்டத்தில் உள்ளது. ஆமூர் என்னும் மூதூர் திருநாவுக்கரசர் பிறந்த ஊராதலால் திருவாமூர் ஆயிற்று.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment