பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 170                                                                                     இதழ் - ௧0
நாள் : 17 - 08 - 2025                                                                   நாள் :  - ௨௦௨


பழமொழி அறிவோம்

பழமொழி – 170

என்றும் மனநலம் ஆகாவாம் கீழ் '
விளக்கம்

   எத்தகைய நல்லவா்கள் தொடா்பு இருப்பினும் கீழ்மக்கள் தங்கள் குணத்தில் மாற்றம் கொள்ள மாட்டாா்கள் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.    

உண்மை விளக்கம்

         மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
         உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
         இனநலம் நன்குடைய ராயினும் 'என்றும்
         மனநலம் ஆகாவாம் கீழ்'

    ஆறுகளில் உள்ள நல்ல நீர் மிகுதியாக கடலில் கலந்தாலும் கடலின் உப்புத்தன்மை எப்போதும் மாறுவதில்லை.

  அதுபோலவே தீய குணங்களை மிகுதியாகக் கொண்ட ஒருவன் எத்தகைய நல்லவா்களிடத்துச் சோ்ந்தாலும் அவர்களின் தீய குணம் என்றும் மாறாது என்பதைக் குறிக்கவே என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment