பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 61                                                                                       இதழ் -
நாள் : 25-06-2023                                                                      நாள் : -0-௨௦௨௩
     
வினையெச்சம்
வினையெச்ச வகை
     வினையெச்சம் என்பது தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரு வகைப்படும்.
 
தெரிநிலை வினையெச்சம்
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
சான்று :
சென்று வந்தான்   
இத்தொடரில் உள்ள சென்று என்னும் சொல் செல்லுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
 
எதிர்மறை வினையெச்சம்
எதிர்மறுப்பில் வரும் வினையெச்சம் எதிர்மறை வினையெச்சம் ஆகும் . எதிர்மறை வினையெச்சம் ஆ என்னும் எதிர்மறை இடைநிலையையும் து, மல், மே என்னும் விகுதியையும் பெற்று வரும்.
சான்று :
பேசாது சென்றான்   
 
இத்தொடரில் உள்ள பேசாது என்பது எதிர்மறை வினையெச்சம். து என்பது எதிர்மறை வினையெச்ச விகுதி.
 
பேசாமல் போனான்
இத்தொடரில் உள்ள பேசாமல் என்பது எதிர்மறை வினையெச்சம். மல் என்பது எதிர்மறை வினையெச்ச விகுதி.
 
உண்ணாமே கொடுத்தான்
இத்தொடரில் உள்ள உண்ணாமே என்பது எதிர்மறை வினையெச்சம்.மே என்பது எதிர்மறை வினையெச்ச விகுதி.
 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment