இதழ் - 182 இதழ் - ௧௮௨
நாள் : 16 - 11 - 2025 நாள் : ௧௬ - ௧௧ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 182
' ஒடியெறியத் தீரா பகை '
விளக்கம்
குச்சியை ஒடித்து எறிவது போல் பகைவரை ஒடித்து எறிந்து விடுவதால் மட்டும் பகைமை தீராது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
மறையா(து) இனிதுரைத்தல் மாண்பொருள் ஈதல்
அறையான் அகப்படுத்துக் கோடல் - முறையால்
நடுவணாச் சென்றவரை நன்கெறிதல் அல்லால்
'ஒடியெறியத் தீரா பகை'.
இங்கு ஒடியெறிதல் என்றால் குச்சியை பாதி வெட்டியும் வெட்டாமலும் வைத்தல் என்று பொருள்.
நாம் ஒருவனிடம் பகைமையை நீக்கவேண்டும் என்றால் உள்ளத்தில் கபடம் இல்லாமல் பேச வேண்டும். மாண்புடைய பொருள்களைக் கொடுக்க வேண்டும். தமக்கு எளியவராக ஆக்கிக் கொண்டு முன்னர் அவரைப் பகைத்தவரைக் கண்டு நடுநிலையாக நின்று அப்பகையை முற்றிலும் அழித்தல் வேண்டும்.
அதைவிடுத்து குச்சியை ஒடித்து எறிவது போல் எறிவதனால் மட்டும் முற்றிலும் பகைமை தீராது என்பதைக் குறிக்கவே 'ஒடியெறியத் தீரா பகை' என்று இப்பழமொழி பொருள் உணா்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் வரும் வாரங்களில் தொடர்ந்து அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment