பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 17                                                              இதழ் -
நாள் : 21-8-2022                                                  நாள் : --௨௦௨௨
 
 
 
பழமொழி – 17
 
“ அா்ப்பணுக்கு வாழ்வு வந்தால் அா்த்தராத்திாியில் குடை பிடிப்பான் “

     ஒருவனுக்குத் திடீரெனச் செல்வம் வந்து விட்டால் (உழைக்காமல்) தன் பழைய நிலை உணராமல் அதாவது, தலைகால் புாியாத அளவுக்கு அவனது செயல் இருக்கும் என நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்
 
“ அா்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அா்த்தராத்திாியில் கொடை கொடுப்பான் “
 
     ஒருவன் தன் வாழ்நாளில் பிறருக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவன் எனில் தன்னிடம் கொடை கேட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அது இரவு நேரமாக இருந்தாலும் (அர்த்தராத்திரி) நேரம் பார்க்காமல் கொடை வழங்குவான் என்பதே இப்பழமொழியின் உண்மைப் பொருளாகும்.
 
     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment