பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 134                                                                                        இதழ் - ௧
நாள் : 17- 11 - 2024                                                                          நாள் :  -  - ௨௦௨௪



பழமொழி அறிவோம்

பழமொழி – 134

“ உவவாதார்க்(கு) ஈத்ததை எல்லாம் இழவு 

விளக்கம்
ஒருவரிடம் உதவியைப் பெற்றுக்கொண்டு அந்த உதவிக்கு நன்றி காட்டாத ஒருவரின் நட்பை விலக்குதல் வேண்டும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

உண்மை விளக்கம்
தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்(று) ஆற்றி
நிகராகிச் சென்றாகும் அல்லர் - இவர்திரை
நீத்தநீர்த் தண்சேர்ப்ப! செய்தது 'உவவாதார்க்(கு)
ஈத்ததை எல்லாம் இழவு'.

ஒருவன் தனக்கு உதவி செய்தவருக்கு துன்பம் வந்த காலத்தில் சுற்றத்தாராலும் தம்மாலும் இயன்ற உதவி செய்திடல் வேண்டும். அவ்வாறு உதவி செய்தவருக்கு தக்க காலத்தில் பிரதிபலனாய் உதவி செய்யவிடில் நாம் செய்த உதவி போரில் எதிரிகளுடன் இழந்த செல்வத்திற்குச் சமம் ஆகும். அவை இழந்து போன செல்வமாகவே கருதப்படும் என்பதை 'உவவாதார்க்(கு) ஈத்ததை எல்லாம் இழவு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.


இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment